27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.
இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர்.
இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
விடயம் தொடர்பாக மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,
27 வருடங்களாக நாங கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களுடை ய நிலத்தை பார்க்க முடியாது. வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் சிங்கள மக்கள் மட்டும் தங்கியிருந்து நீராடி மகிழலாம்.
இது என்ன நியாயம்? எனவே எங்களுடைய நிலத்தில் எங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு கொண்டனர்.