சுற்றுலா வந்த ஜேர்மன் பிரஜைக்கு நடந்த சோகம்

Report Print Gokulan Gokulan in சமூகம்
1617Shares

ஹிக்கடுவை - பிரதேசத்தில் கடலில் மூழ்கி சிகிச்சைப்பெற்று வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று அதிகாலை(14) இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு கடந்த 12ஆம் திகதி சுற்றுலா வந்த ஜேர்மன் பிரஜைகள் சிலர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த நபர் கடலலலையில் சிக்குண்டுள்ளார்.

இதேவேளை மீட்கப்பட்டு கராப்பிடி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments