பதுளை-இம்புல்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் செலுத்திய சைக்கிள் பாதையை விட்டு விலகியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.