உடலில் பெரும் பகுதி இயங்காது! ஆனால் இலங்கை இளைஞன் அவுஸ்திரேலியாவில் வரலாற்றுச் சாதனை..!

Report Print Shalini in சமூகம்
2082Shares

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இளைஞன் தினேஷ் பலிபன (32) தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றார்.

நெஞ்சு பகுதிக்கு கீழ் செயலற்ற நிலையில் இருக்கும் தினேஷ் பலிபன அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக வெளியேறி உள்ளார்.

குறித்த இலங்கை பிரஜை பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் வைத்திய கற்கையைமேற்கொண்டு வந்த நிலையில் பிலிஸ்பேனில் வசிக்கும் அவரது பெற்றோரை சந்திக்க சென்ற போது ஏற்பட்ட விபத்தில் நெஞ்சு பகுதிக்கு கீழ் செயலற்ற நிலைக்கு உள்ளானார்.

இதன் காரணமாக, தினேஷ் பலிபனவின் வைத்திய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டுடிருந்த தினேஷ் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தனது பட்டப்படிப்பை தொடர தீர்மானித்தார்.

வைத்தியராக வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி நடவடிக்கைகளை கடந்த இரு வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் கல்வியை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அவர் தனது வைத்திய பட்டப்படிப்பை தற்போது நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியப்பட்டம் பெற்றுள்ள இரண்டாவது நபர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன பெற்றுள்ளார்.

Comments