20 கிலோகிராம் கடல் ஆமை இறைச்சி: 8 மீனவர்கள் கைது

Report Print Vino in சமூகம்
89Shares

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து இரண்டு கப்பல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு கடற்றொழில் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் புத்தளத்தில் 20 கிலோகிராம் கடல் ஆமை இறைச்சியினை கொண்டுவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மகாவெவ கடற்தொழில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments