தமிழகம் தனுஸ்கோடியில் இலங்கையர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
69Shares

தமிழகம் தனுஸ்கோடியில் இலங்கை தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் பொலிஸாரின் வழமையான கண்காணிப்பு பணிகளின் போது 36 வயதான டியூக் பிரிதிவிராஜ் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது,

மன்னார் பேசாலையை சேர்ந்த இவர் கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் மன்னாரில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் தனுஸ்கோடி தீவை வந்தடைந்த போதே கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பயன்படுத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுக்காக அவர் 60ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவர் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு சென்னையில் இருந்ததாகவும் பின்னர் 140 தமிழர்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Comments