வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு

Report Print Theesan in சமூகம்
71Shares

வவுனியா - சமளங்குளம், கல்லுமலை ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்கள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வு அரசியல் தலைவர்களின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, வசதியற்ற பாடசாலை செல்லும் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், ம. தியாகராசா, செ. மயூரன், சிவநேசன், வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம. ஆனந்தராஜ், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ப. சத்தியசீலன் ஆகியோர் இந்நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, தமிழருவி த. சிவகுமார், மேழிக்குமரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மணிக்கம் ஜெகன், கல்லுமலை ஆலய நிர்வாக சபையினர், சமளங்குளம் விளையாட்டுக்கழகம்,பொதுமக்கள், பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தைப்பொங்கல் சமயவழிப்பாடுகளின் பின்னர் மாணவர்களின் வரவேற்பு நடனம், பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments