இளைஞர்கள் தங்களது தகைமைகளை அதிகரித்துக் கொள்ளவேண்டும் - அருமைநாயகம்

Report Print Kumar in சமூகம்
35Shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றோர் தொகை அதிகமாகவுள்ள நிலையில் தமது தொழில்தகைமைகளை அதிகரித்து தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை இளைஞர்கள் மத்தியில் ஏற்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே கூரையின் கீழ் கட்டிட நிர்மாண சேவைகளை வழங்கிவரும் திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தில் கடமையாற்றுவோரில் தொழில் ரீதியான பயிற்சினை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(14) மாலை நடைபெற்றுள்ளது.

இருதயபுரம்,கொன்பர்ட் மண்டபத்தில் இந்த நிகழ்வு திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.திவாகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் கலந்துக்கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 04 வருடமாக மட்டக்களப்பு நகரில் கட்டிட நிர்மாணத்துறையில் தனக்கென தனித்துவத்துடன் கட்டிடத்துறைக்கு தேவையான அனைத்து மனித வளங்கள் உட்பட அனைத்து வளங்களையும் கொண்டு திவா கோம் டிசைனர் மற்றும் பில்டர் நிறுவனம் இயங்கிவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, தொழில்பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் தொழிலாளர்களுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,

கட்டிட ஒப்பந்தகாரர்கள் தமது இலாபம் கருதி செயற்பட்டுவரும் நிலையில் தமது நிலையத்தில் தொழில்புரிபவர்கள் சிறந்த தொழிலாளிகளாக வரவேண்டும்.

மேலும், அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளையும் வழங்கி சம்பள அதிகரிப்பினையும் வழங்குவது என்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Comments