மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் விசேட தடை

Report Print Ashik in சமூகம்
83Shares

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கட்டுவலை, சுருக்குவலை உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீனவர்கள் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க மன்னார் கடற்தொழில் திணைக்களம் கால அவகாசம் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் கட்டுவலை, சுருக்குவலை உள்ளிட்ட அனைத்து தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு கடற்தொழில் திணைக்களம் கடந்த 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று முதல் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கினால் நாங்கள் மாற்றுத் தொழிலை கையாள முடியும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை குறித்த தொழிலை கைவிட இம்மாதம் 15 ஆம் திகதிவரை மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று முதல் மன்னார் மீனவர்களுக்கு தடை செய்யப்பட்ட மீன் பிடி முறமைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு கடற்படை தடை விதித்துள்ளது என குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Comments