கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட சிகரட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த ஒருவர் நேற்று இரவு 7.40 மணியளவில் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட சிகரட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப் தலைமையிலான குழு ஒன்று இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 682 தடை செய்யப்பட்ட சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இதேவேளை, சந்தேக நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.