சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற ஒருவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்
27Shares

ஹட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர் நேற்று மாலை ஹட்டன் - கொழும்பு பழைய வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மணலை அனுமதி பத்திரம் இல்லாமல் ஹட்டன் ரொத்தஸ் பகுதியிலிருந்து ஹட்டன் டிக்கோயா பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின் கைப்பற்றப்பட்ட மணலையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் எதிர்வரும் 24.01.2017 அன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments