கடந்த வருடம் வட மாகாணத்தின் 80 ஆயிரம் கடற் தொழிலாளர்களின் மொத்த உற்பத்தியாக, 66 ஆயிரத்து 841 மெற்றிக்தொன் பெறப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்களங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் 2016ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த கடல் உணவுகளின் அளவின் பிரகாரமே மேற்படி அளவு எட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 31 ஆயிரத்து 476 மெற்றிக்தொன்னும், மன்னாரில் 16 ஆயிரத்து 308 மெற்றிக் தொன்னும், உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 338 மெற்றிக் தொன்னும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 ஆயிரத்து 719 மெற்றிக் தொன் கடலுணவு உற்பத்தியும் பெறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வட மாகாணத்தின் கடலுணவு 2016ல் 66308 மெற்றிக் தொன் உற்பத்தி பெறப்பட்டுள்ளது.
இதேவேளை 2015ம் ஆண்டில் வட மாகாணத்தின் மொத்த கடலுணவு உற்பத்தியானது 65 ஆயிரத்து 568 மெற்றிக் தொன், பெறப்பட்டிருந்த நிலையில் 2015ம் ஆண்டினை விட 2016ம் ஆண்டின் வட மாகாண கடல் உணவு உற்பத்திகள் 1273 மெற்றிக் தொன் அளவு அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.