கிளிநொச்சியில் திருட்டு மணல் விற்பனையை தடுக்க புதிய நடவடிக்கை

Report Print Sumi in சமூகம்
35Shares

கிளிநொச்சியில் இடம்பெறும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தேவைகளிற்கு நிலவும் மணல்தேவையினை பூர்த்தி செய்யவும் திருட்டு மணல் விற்பனையை தடுப்பதற்காகவும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

மணல் கொள்ளை தொடர்பிலும் மாவட்டத்தின் மணல் தேவையினை பூர்த்தி செய்யுமாறும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று மாவட்டச் செயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலுக்கு திணைக்கள அதிகாரிகளுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் அவர்களால் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துக்களான மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத்திட்டம் பொது வேலைத்திட்டங்கள் எதற்கும் நியாயபூர்வமாக மணலைப் பெறமுடியவில்லை.

இருப்பினும் இதே மாவட்டத்தில் கள்ள மணல் அகல்வு இடம்பெறுவதோடு அவர்களிடம் அதிக விலைக் கொள்வனவு செய்யும் அவலமே தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே இவை இரு பிரச்சிணைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்கும் வகையிலேயே ஆராயப்பட்டது.

இதன் அடிப்படையில் ஓர் விசேட முடிவு எட்டப்பட்டது. அதாவது மக்களின் தேவையிற்கு ஏற்ற வகையில், நியாயவிலையில் மணலை வழங்குவதன் மூலம் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுவதனால் அவர்கள் திருட்டு மணலை கொள்வனவு செய்யவேண்டிய தேவை ஏற்படாது.

அதேபோன்று அவர்களிற்கு வழங்கும் மணலை நியாயவிலையில் வழங்கும் நோக்கில் இரு புதிய அனுமதி வழங்கப்படுகின்றது.

அவ்வாறு வழங்கப்படும் மணல்களை இரு ப.நோ.கூ.சங்கங்களிடமே வழங்குவதற்கும் தீர்மாணித்தோம். இவ்வாறு யாட் அனுமதி வழங்கப்படுகின்றபோது மணலிற்கான ஓர் நியாயவிலை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விநியோகம் இடம்பெறுகின்ற பட்சத்தில் மணலினால் ஏற்படும் அதிக பிரச்சணைகளிற்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments