சி.ஐ.டி வேடத்தில் வீட்டிற்குள் நுழைந்து கைவரிசையைக் காட்டிய திருடன் : வவுனியாவில் சம்பவம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா-செட்டிகுளம் பகுதியில் சி.ஐ.டி என இருவர் அடயாளப்படுத்திக் கொண்டு திருட்டில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சி.ஐ.டி வேடத்தில் இருவர் வீட்டை சோதனை செய்வதாக கூறி 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 7.30 மணியளவில் செட்டிகுளம், முகத்தான்குளம், பாம்- 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற இருவர் தாம் சி.ஐ.டி எனவும் உங்களது வீட்டில் மதுபானம் மற்றும் டைனமேற் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அப்போது அவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் சோதனையிட அனுமதித்த போது வீட்டில் இருந்த 5 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Comments