வவுனியாவில் அமைக்கப்பட்ட பொதுக்கிணற்றுக்கும் நகரசபைக்கும் தொடர்பு இல்லை!

Report Print Theesan in சமூகம்

வவுனியா தனியார் காணியில் அமைக்கப்பட்ட பொதுக்கிணற்றுக்கு நகரசபை அனுமதி கொடுத்துள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபையினால் தனியார் காணி ஒன்றில் பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இது நகரசபையின் அனுமதியுடன் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றாக தவறான செய்தி.

இக்கிணறு தொடர்பாக நகரசபைக்கு தனிநபர் ஒருவர் முறையிட்டு உள்ளதையிட்டே அது நகரசபையினரால் வவுனியா பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் விபரங்களையும் பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது. இக்கிணறு அமைக்கும்போது நகரசபையிடம் தெரியப்படுத்தப்படவில்லை.

அது தொடர்பான விடயங்களும் நகரசபையினருக்குத் தெரியாது என நகரசபை செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments