புகையிரத இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறுத்தம்

Report Print Nivetha in சமூகம்

புகையிரத இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவிற்கும் புகையிரத இயந்திர சாரதிகளுக்கும் இடையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என லொகோமொட்டிவ் ஒபரேட்டின் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments