நூற்றாண்டு விழா தொடர்பான பழைய மாணவர் சங்க கலந்துரையாடல்

Report Print Navoj in சமூகம்
23Shares

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுடனான கலந்துரையாடல் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (17) இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு அனைத்து மாணவரது ஒத்துழைப்பின் அவசியம் பாடசாலை அதிபரால் கோரப்பட்டது.

மேலும் எதிர்வரும் தினங்களில் ஓட்டமாவடி பிரதேசங்களிலுள்ள தனவந்தர்கள் மற்றும் வர்த்தகர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக இரு நாட்களும் முழு நேர களப் பயணத்தில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

குறித்த யோசனை பாடசாலையின் பழைய மாணவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான எம்.பி.எம்.பிர்னாஸினால் முன்வைக்கப்பட்டது.

கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றினை பழைய மாணவர்களிடையே நடாத்துவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியும் நிபந்தனைகளையும் பாடசாலையின் பழைய மாணவரும் உதவித் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.ஏ.றியாஸினால் முன்வைக்கப்பட்டது.

எதிர்வரும் 31ம் திகதிக்கு முன் அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கும் படியும் இதில் பங்குபற்றுவோர் பழைய மாணவர் சங்கத்தில் உறுப்புரிமை பெற்றிருக்க வேண்டும் எனவும் பதியத் தவறியவர்கள் 500 ரூபா பணத்தினை செலுத்தி உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மேலதிக தகவல்களை எம்.முஹாஜிரின் ஆசிரியர், எம்.இம்தியாஸ் (முஸ்லிம் எய்ட்) ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிபர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments