நச்சுத்தன்மையற்ற நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்

Report Print Navoj in சமூகம்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் வழிகாட்டிலின் நச்சுத்தன்மையற்ற நாடொன்றை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட பூர்த்தியினை முன்னிட்டு தேசிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக நச்சுத்தன்மையற்ற நாடொன்றைக் கட்டியெழுப்புதல் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவின் நோக்கமாக ஒரு பில்லியன் கிளிசீரியா மரக்கன்றுகள் புதிதாக நடுகை செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்று சேர்ந்து வாகரை பிரதேச சபைக்குச் சொந்தமான புணாணைக் கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள வாலமண்கேணி கிராமத்தில் உள்ள காணியில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட கிளிசெரியா தடிகளை நடும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளர் சி.இந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாப்தீன், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன், கொக்கட்டுச்சோலை மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர், வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Comments