வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பொஹவஸ்வெவ பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை இன்று காலை மேற்கொண்டிருந்தனர்.
தமது பகுதிக்கான பிரதேச செயலகத்தினை ஒன்றிணைத்து ஒரு செயலகத்தில் சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துத்தருமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சல்லிகம, வெகறதன்ன, நாமவகம, நந்திமித்தகம போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.