தமிழ்நாட்டு மக்களுக்காக : ஈழத்தில் குவியப்போகும் ஆதரவு...!

Report Print Vino in சமூகம்
603Shares

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டினை தடை செய்தமைக்கு எதிராக தமிழ்நாட்டில் தற்போது சர்ச்சைகள் பல வெடித்து வருகின்றது.

இந்த வகையில் நேற்று தமிழ் நாட்டின் பல பிரதேசங்களிலும் அதிகளவான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இரவிரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இதற்கு ஆதரவினை தெரிவித்து அங்கு சென்று போராட்டத்தினை முன்னெடுக்க தமது முகநூல் ஊடக அநேகமானவர்கள் ஆர்வத்தினை முன்வைத்துள்ளனர்.

குறித்த போராட்டத்திக்கு இலங்கை விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் பதிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதற்கும் அநேகமானவர்கள் ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் இன்று நல்லூரில் அதிகமாக மக்கள் ஒன்று கூடுவார்கள் என அதிலிருந்து அறிய கூடியதாக உள்ளது.

ஈழ தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பினை தெரிவித்து தமிழ்நாட்டில் போராட்டங்களை கடந்த ஆண்டும் கூட தமிழக மக்கள் முன்னெடுத்திருந்தனர்.

அந்த வகையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments