அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் “கார்பட் வீதி” அமைப்பதற்காக 50 மில்லியனும், மைதானத்தையும் அதனை அண்டிய குளத்தையும் அழகுபடுத்த 20 மில்லியனும் ஒதுக்கீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வர்த்தக கட்டடத் தொகுதி போன்ற பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச மத்திய குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments