வவுனியா நகரசபை பொதுநூலகத்தின் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் திருட்டு

Report Print Thileepan Thileepan in சமூகம்
35Shares

வவுனியா நகரசபைக்கு சொந்தமான நூல் நிலையத்தில் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்கள் நான்கு கடந்த செவ்வாய்கிழமை திருட்டு போயுள்ளது.

இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த காலங்களில் நகர சபையில் கணணிகள், ஊழியர்களின் சுயவிபரக்கோவைகள் காணாமல் போயிருந்தமை போன்று தற்போதும் தொடர்ந்தும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments