ரயிலில் பிறந்த குழந்தையை வீதியில் விட்டு சென்ற கொடூர தாய்!

Report Print Vethu Vethu in சமூகம்

மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் பிறந்த குழந்தை ஒன்றை வீசி சென்றுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீரிகம ரயில் நிலையத்தை ரயில் தாண்டி செல்லும் போது குழந்தையை இவ்வாறு வீசி சென்றுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு வருகைதந்த பயணி ஒருவர் இவ்வாறு குழந்தை விழுந்துக் கிடந்த நிலையில் கண்டுள்ளார்.

இந்த குழந்தையை ரயில் கதவில் அல்லது கழிப்பறையின் ஊடாக வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments