பெருந்தொகையான கடல் கனிய வளங்களை கொள்ளையிட்டு சென்ற நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் மீதான பரிசோதனையின் போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களில் மாடுகளின் கொம்புகள், சிப்பிகள், சங்குகள் போன்றவை அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பொருட்களை 5 வருடங்களுக்கு முன்பே பல்கலைக்கழகங்களுக்கு அன்பளிப்பாக வழங்க தீர்மானித்திருந்ததாக சுங்கப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொருட்கள் அலங்காரங்களுக்கு மட்டும் பயன்படுமே தவிர அதில் எவ்வித மதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இப்பொருட்கள் அனைத்து சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.