காணிப்பிரச்சினை ஒன்று மிளகாய்த் தூள் வீச்சில் முடிவடைந்தமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கட்டைவேலி வீரபத்திரர் கோவிலடியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணிப் பிரச்சினை ஒன்று தொடர்பில் வேலி அடைப்பதற்கு ஒரு சாரார் முயன்ற போது இன்னொரு சாரார் அதனை எதிர்த்ததாகவும் இதன் விளைவாக ஒருதரப்பு பெண் இன்னொரு தரப்பு பெண்ணின் கண் பகுதியில் மிளகாய் தூளை வீசியதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நெல்லியடிப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- Valampuri