வறட்சியால் மரக்கறி வகைகள் பாதிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்
52Shares

மலையகத்தில் தற்போது காணப்படும் வறட்சியான காலநிலை காரணமாக மலையக மக்களுக்கு மற்றும் கிராமபுர மக்களுக்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதைபோல் விவாசாயிகளுக்கும் தேயிலைக்கும் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மலையகத்தில் இருக்கும் நீர்தேக்கமான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகின்றது.

தேயிலை தோட்டங்களில் தேயிலை கருகி இருப்பதனால் தோட்ட தொழிலாளிகளின் வேலை நாட்கள் குறைந்துள்ளதால் அவர்களின் பொருளாதார வசதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையக பகுதிகளில் தோட்ட தொழிலாளியும் கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிக சிறப்பாக செய்துள்ளனர்.

ஆனால் தற்போது இருக்கும் காலநிலையின் காரணமாக மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

அதேபோல் மலையக பகுதிகளில் குடிநீர் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீருக்காக குடிநீர் காணப்படும் பல தூர இடங்களுக்கு சென்று குடிநீரை பெறுகின்றார்கள்.

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு புற்கள் இல்லாத காரணத்தால் பால் உற்பத்தியும் குறைந்திருப்பதாக பால் உற்பத்தியுள்ளார்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் காணப்படும் இடங்களில் தீ வைத்ததால் குடிநீருக்கு மிக பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தில் இவ்வாறான காலநிலை தொடர்ந்தும் காணப்பட்டால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments