பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் மோதல்

Report Print Kamel Kamel in சமூகம்
153Shares

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த ஒரு மாணவர் பேராதனை போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதை பிரச்சினை காரணமாகவே மாணவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பகிடிவதைக்கு எதிர்ப்பை வெளியிட்ட இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை கலைப்பிரின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த மாணவர் நீதவான் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Comments