ஆறரை இலட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு: மட்டக்களப்பில் 3 இலட்சம் பேர் பாதிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்
67Shares

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 218 குடும்பங்களைச் சேர்ந்த ஆறு இலட்சத்து 45 ஆயிரத்து 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 ஆயிரத்து 401 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, அநுராதபுரம், மொனராகலை, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை ஆகிய 13 மாவட்டங்களே வறட்சியால் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 51 ஆயிரத்து 266 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 3 ஆயிரத்து 915 குடும்பங்ளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments