யுவதியுடன் இரகசிய உறவு..! தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதி...!

Report Print Vino in சமூகம்

நான்கு மாதங்கள் 15 வயதுடைய இளம் யுவதி ஒருவருடன் இரகசிய உறவினை பேணி வந்த 23 வயதுடைய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கையினை பெறுவதற்காக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதியை சட்ட மருத்துவரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நாவுல - உடுதெனிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் கல்நெவ பிரதேசத்தை சேர்ந்த இளம் யுவதியுடன் தொடர்பினை வைத்திருந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த இளைஞனுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது தாயாரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments