இலங்கையில் கொல்லப்படும் தமிழ்..! அரச கருமமொழி அமைச்சிற்கும் சோதனை..!

Report Print Vino in சமூகம்
153Shares

இலங்கையில் அரசாங்கத்தினால் அமைக்கப்படும் கட்டடங்கள், திணைக்களங்கள், பொது நிலையங்கள் போன்றவற்றில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகள், பதாகைகள் போன்றவற்றில் தமிழ் மொழி மிகமோசமான முறையில் எழுத்துப் பிழைகளுடன் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இது தொடர்பாக முன்னதாக பலமுறைப்பாடுகளும், விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் அது தொடர்பில் பல்வேறு தடவைகள் அரச கரும மொழி அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றிற்கு உரிய முடிவுகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.

குறிப்பாக இலங்கை அமைச்சுக்களினால் வெளியிடப்படும் பதாதைகள், பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துப் பிழை என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் தேசிய சுகவாழ்வு , கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் நூலகம் ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நூலகத்திற்கு வெளியில் பொருத்தப்பட்டுள்ள பெயர்பலகையில் எழுதப்பட்டுள்ள தமிழ் மொழி முழுக்கமுழுக்க பிழையாக எழுதப்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பில் மக்கள் சமூக வலைத்தளங்களில் கவலை வெளியிட்டுவருகின்றனர்.

"நாட்டில் இரண்டாவது மொழியாக இருக்கும் தமிழ் மொழிக்கு, அரச கருமமொழிகள் அமைச்சரே கவனம் செலுத்தாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?

"மொழியை கற்றுத்தரும் மற்றும் எதிர்கால சந்ததியை வளர்க்கும் முகமாக அமைக்கப்படும் நூலகத்தில் பெயர் பலகையே இத்தைகைய பிழைகளுடன் காணப்படின், மாணவர்களுக்கு எவ்வாறு மொழிப் பற்று ஏற்படும்"

பெயருக்கு மட்டும் தான் கருமமொழி அமைச்சரா? நூலகத்திலும் கூட அரசியல் இலாபங்களை பெயருக்காக திறப்பு விழாக்கள் நடைபெறுகின்றதா?"

"பாராளுமன்றத்தில் வாய்ச்சொல் வீரர்களாக இருந்தால் போதாது எதிர்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டாக திகழும் நல்லதோர் தலைவனாக இருக்க வேண்டும்"

இவ்வாறு மக்கள் தமது வெறுப்புக்களை வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான் என்பார். இதற்கு ஏற்ப பெயர்ப்பலகைகள், பதாகைகள் போன்றவற்றில் எழுதப்படும் தமிழ் மொழியின் பிழைகள் குறித்து அரச கருமமொழிகள் அமைச்சு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments