கிளிநொச்சியில் பாரிய குடிநீர்த் தட்டுப்பாடு..! மக்கள் பெரிதும் பாதிப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
61Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் 58 கிராமங்களில் கடுமையான வறட்சியினால் குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் கிளிநொச்சி மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ந.பிரபாகரன், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நீரை பெறுவதற்கான நீர் ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டு நிலமைகள் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலக எல்லைக்குள் ஒரு பகுதி கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இதனால் 58 கிராமங்களை சேர்ந்த 12200 மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டி னை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் குடிநீரை மக்களுக்கு வழங்குவதற்கு நீர் ஆதாரங்கள் தேவை.

ஆனால் நீர் ஆதாரங்கள் எவையும் இல்லை. உதாரணமாக தினசரி 4 லட்சம் லீற்றர் நீரை பெற கூடிய நீர் ஆதாரங்கள் இல்லை.

மேலும் நீரை விநியோகிப்பதற்கான வாகனங்களும் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே இதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றார்.

Comments