மன்னார் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் சந்திப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த மீனவ பிரதிநிதிகள் சிலர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு, மன்னார் மாவட்ட மீனவர்கள் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது மன்னார் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments