ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக பாலத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்...! போக்குவரத்து ஸ்தம்பிதம்

Report Print Ashik in சமூகம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவது போராட்டம் வெடித்துள்ள நிலையில், இராமேஸ்வத்திலும், இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள், தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்க்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

பீட்டா என்ற அமைப்பிற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்து நோக்கில் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும், அது தோல்வியில் முடிவடைந்து.

எனினும், பயணிகளின் நலன் கருதி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதேவேளை, பாலத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments