சித்திரவதைக்கு எதிரான நீதிபதியின் மகன் மீது தாக்குதல்

Report Print Vethu Vethu in சமூகம்
105Shares

சித்திரவதைக்கு எதிரான பேராதனை பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் தொடர்பான துறையின் இரண்டாவது வருட மாணவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகிடிவதை மேற்கொள்வோரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில் அவர் கற்கும் பிரிவுக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவன் உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன் என பல்கலைக்கழக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவத்தைக்கு எதிரான மாணவருக்கு அந்த பிரிவிலேயே பகிடிவதை மேற்கொள்பவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பல்லைக்கழக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பல்கலைக்கழக வளாகத்தினுள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற 8 மாணவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments