'கட்டு வலை தொழில்' தடை செய்யப்பட்ட தொழில் இல்லை - மீனவ சங்கம் விசனம்

Report Print Ashik in சமூகம்
25Shares

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழில்களில் ஒன்று 'கட்டுவலை தொழில்' எனவும் செய்திகள் வெளியாகியது.

கட்டுவலைத் தொழிலானது தடை செய்யப்பட்ட மீன் பிடி தொழில் என வெளியான தகவல் முற்றிலும் தவறானது என மன்னார் பனங்கட்டுக்கோட்டு மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மீனவ சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில்,

கட்டுவலைத் தொழிலானது இலங்கையில் தடை செய்யப்பட்ட தொழில் இல்லை.

காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பிரதேசங்களில் வட கடல் மற்றும் தென் கடல் பகுதிகளில் குறித்த தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னாரில் கட்டுவலைத் தொழிலுக்கு சிலர் இடையூரை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாகவே இந்த தொழிலுக்கு மன்னாரில் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கட்டுவலை தொழில் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பையே எதிர்பார்த்துள்ளோம்.

ஆனால் 'கட்டுவலைத் தொழில்' தடைசெய்யப்பட்ட தொழில் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Comments