மாந்தை மேற்கு விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Report Print Ashik in சமூகம்
16Shares

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரு விளையாட்டுக்கழகங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நேற்று(18) இடம் பெற்ற நிகழ்வின் குறித்த விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

மாந்தை மேற்கு சென் - தோமஸ் விளையாட்டுக்கழகம், மற்றும் டிலாசார் விளையாட்டுக்கழகம் போன்றவற்றிற்கே ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் மற்றும் மாந்தை மேற்கு விளையாட்டு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments