முன்னாள் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரான சஷி வெல்கமவின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சபையின் தலைவராக இருந்த போது இடம்பெற்ற 126 மில்லியன் நிதி மோசடி தொடர்பில், சஷி வெல்கம குற்றப்புலனாய்வு பிரிவினரால் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.