விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு

Report Print Shalini in சமூகம்
1018Shares

மன்னார் சித்திவிநாயகர்புரம் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என மன்னார் விமானப்படை புலனாய்வு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற படையினர் குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இவற்றில் பீரங்கிகள், 10 கண்ணி வெடிகள், 2 கைக்குண்டுகள், தோட்டாக்கள், 5 மோட்டார் குண்டுகள் உட்பட பல போர் தளபாடங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நீதிமன்ற அனுமதியை விமானப்படை அதிகாரிகள் கோரியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments