மழைவேண்டி ஆலயங்களில் நீராபிஷேகம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாட்டில் வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நிடிக்கும் நிலையில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்வளம் கொண்ட மலையக தோட்டபுறங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழைவேண்டி தோட்டப்பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தண்ணீர் ஊற்றி பூஜை வழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

லிந்துலை டில்குற்றி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று மாலை 05 மணியளவில் ஆலயத்தில் சுற்று வட்டாரங்களுக்கும் சுவாமி விக்கிரகங்களுக்கும் குளிர்ச்சி அளிக்கும் வகையில் நீராபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் பிரதேச மக்கள் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபாடில் ஈடுபட்டுள்ளனர்.

Comments