வேலைத்திட்டங்களுக்கு ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது பாரிய சவால்

Report Print Sumi in சமூகம்
42Shares

யாழ். மாவட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது பெரும் சவாலாக இருப்பதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(19) யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 50 மில்லியன் ரூபா வேலைத்திட்டம் ஒப்பந்தக்காரர்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தினை நிறைவேற்ற வடமாகாணத்தில் உள்ள ஒப்பந்தகக்காரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

எமது மாவட்டத்தில் ஒப்பந்தக்காரர்கள் மிகக்குறைவாக உள்ளனர். மேலும் ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது.

கடந்த வருடம் போல ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது தொடர்பில் 2017 ஆம் ஆண்டும் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

2017 ஆம் ஆண்டு இரு பாரிய திட்டங்கள் உள்ளன. வறட்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளன.

இந்த வருடம் வறட்சியை மிக சவாலாக எதிர்நோக்கி வருகின்றோம். 2017 ஆம் ஆண்டு வறட்சி அதிகமாக காணப்படும்.

கடந்த வருடம் மழை வீழ்ச்சி குறைவாக இருந்தமையினால் வறட்சியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. தற்போது பெருமளவான நீர் கடலுக்கு சென்றுள்ளதனால், நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளங்கள் மற்றும் அணைகளை புனரமைக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

மேலும் குறைவான மழை வீழ்ச்சி காணப்பட்டமையினால், நீரைக் கூட சேமிக்க முடியவில்லை.

வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மிகச்சரியான திட்டங்களை முன்வைக்க வேண்டியுள்ளதுடன், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Comments