லிந்துலை அகரகந்த பெசிபன் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களிடமிருந்து நகைகளை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று(18) இடம்பெற்றுள்ள நிலையில் இதில் கலந்துக்கொண்டிருந்த பக்தர்களிடமிருந்து சிலர் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிகழ்வின் போது தலவாக்கலை பிரதேசத்தில் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்து இதில் கலந்துகொண்டனர்.
மக்கள் நெரிசலில் உள்நுழைந்த குழுவினர் பெண்களின் கழுத்திலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஹோல்றீம் பிரதேசத்திலிருந்து கலந்துகொள்ள வந்த இரண்டு பெண்களிடமும், யாழ்ப்பாணத்தில் இருந்து வருகைதந்திருந்த பெண்னொருவரிடமும் இருந்து 13 பவுன் தங்க சங்கிலிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.