யாழில் "யாழ்தேவி" மீது தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்

Report Print Vino in சமூகம்
142Shares

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச்சென்ற புகையிரதத்தில் இனந்தெரியாத நபர்களின் கல்வீச்சு தாக்குதலால் புகையிரத சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ் தேவி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெல்லிப்பழை​ பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த தாக்குதலானது மல்லாகம் ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றதாக குறித்த சாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் புகையிரதத்தில் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதாகவும், அதில் சாரதியாக பணியாற்றிய 47 வயதுடைய டி.எம்.தர்மசேன காயத்துடன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments