மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சிறுமியொருவர் காயமடைந்துள்ளார்.
அதிக வேகத்தில் வரும் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருக்கும் வீடொன்றின் வாயிற் கதவை உடைத்துக் கொண்டு குறித்த சிறுமியின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் சிறுமிக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.