தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பண்பாட்டு பவனியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்லடி பாலத்தில் இருந்து மாபெரும் ஊர்வலம் பொங்கல் நிகழ்வு நடைபெற்ற அரசடி தேவநாயகம் மண்டபம் வரையில் சென்றுள்ளது.
மேலும், தமிழர்களின் கலாச்சார இன்னிசை சிறப்பாக இங்கு நடைபெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.துரைரெட்னசிங்கம், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.