யாழில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் புள்ளி விபரங்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
36Shares

யாழ்.மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக இதுவரையில் 27162 குடும்பங்களை சேர்ந்த 93917 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வறட்சியால் காரைநகர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி மீட்புப் பணிகளின் அடிப்படையில் முதற்கட்ட நடவடிக்கையாக காரைநகர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டபகுதிகளில் வசிப்பவர்களுக்கான குடிநீர் விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அனர்த்த முனாமைத்துவ பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக வேலனை பிரதேச செயலகப் பிரிவில் 940 குடும்பங்களைச் சேர்ந்த3,760 அங்கத்தவர்களும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 482 குடும்பங்களைச் சேர்ந்த1,590 அங்கத்தவர்களும்,காரைநகர் பிரதேச செயலகத்தில் 3,539 குடும்பங்களைச் சேர்ந்த 10544 அங்கத்தவர்களும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நல்லூர் பிரதேச செயலகத்தில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,349 அங்கத்தவர்களும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 1,242 குடும்பங்களைச் சேர்ந்த 4,347 அங்கத்தவர்களுமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேப் போன்று சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் 8200 குடும்பங்களை சேர்ந்த 31300 அங்கத்தவர்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 5838 குடும்பங்களைசேர்ந்த 17514 அங்கத்தவர்களும், நெல்லியடி பிரதேச செயலகப் பிரிவில் 1213 குடும்பங்களை சேர்ந்த 3647 அங்கத்தவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப்பிரிவில் 1420 குடும்பங்களைசேர்ந்த 5852 அங்கத்தவர்களும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தவிர ,கரவெட்டி பிரதேச செயலகப்பிரிவில் 2830 குடும்பங்களை சேர்ந்த 9622 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகப்பிரிவில் 255 குடும்பங்களை சேர்ந்த 1052 பேரும், மருதங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் 430 குடும்பங்களை சேர்ந்த 1635 பேருமாக மொத்தமாக 27162 குடும்பங்களை சேர்ந்த 93917 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டசெயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வறட்சியான சூழலினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என அப் புள்ளி விபரத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காரைநகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அனர்த்த முகாமைத்துவ பிரிவானது பொதுமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவற்றை வீண் விரயம் செய்யக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments