முசலியில் அபிவிருத்திக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்!

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களில் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தி பணிகளின் முதற்கட்டமாக இன்று காபட் வீதிகள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது இடம்பெற்றது.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அளக்கட்டு, வேப்பங்குளம், பிச்சை வாணிபக்குளம் ஆகிய கிராமங்களுக்கான 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் காபட் வீதிகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளரான எம்.முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது குறித்த நிகழ்வில் முசலி பிரதேச சபையின் முன்னாள் வேட்பாளர் எம்.ரிபாயி, பள்ளி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments