தேசிய மட்டத்தில் உயிரியல் பிரிவில் மூன்றாமிடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்த மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது இன்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தலைமையில் நடைபெற்றது.
இம்முறை கல்வி பொது உயர்தரப்பரீட்சையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று சாதனை படைத்த பத்மகைலைநாதன் டிலுக்ஷனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவன் டிலுசனுக்கு பழைய மாணவர்களால் மடிக்கணணி வழங்கப்பட்டதுடன் ஆசிரியர் சமூகத்தினராலும் பிரதம அதிதியினாலும் நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் கலந்து கொண்டதுடன் கல்முனை வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் இலங்கநாதன், ரீசா பத்திரண, மெரில்டா, முன்னால் மாமாங்க வித்தியாலய அதிபர் வெஞ்சமீன், தமிழ்பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி திரவியராஜா,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பிரதி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வின் மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.