முள்ளிவாய்க்காலில் டாங்கி எதிர்ப்பு ஆயுதம் கண்டுபிடிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்
237Shares

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுதலைப் புலிகள் மீதான இறுதிகட்ட சமரை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டபோது அங்கே கனரக ஆயுதங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது அங்கே டாங்கி எதிர்ப்பு ஆயுதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆயுதம் துருக்கி நாட்டில் தயாரிக்கப்படதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச நாடுகள் சில இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஆயுதம் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் பொதுமக்களின் தற்காலிக இருப்பிடங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments