உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழினுட்ப பீட கட்டடம் உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று(19) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வானது மாணவர்களின் பாண்ட் வாத்திய மேளங்களுடன் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு பிரதம விருந்தினரால் தொழினுட்ப பீடத்தின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், பாடசாலையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பையும் வறிய மாணவர்களுக்கான உதவித்திட்டமும் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சரின் வருகையினை நினைவுபடுத்தி மரநடுகை நிகழ்வொன்றும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், உள்ளூராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸ,
எம்.எம்.நஜீமுதீனும் பணிப்பாளர்கள் என்.டி.என்.புஸ்பகுமார, ஏ.பி.இளஞ்கிங்க, டி.பி.சமரக்கோனும் உதவிப் பணிப்பாளர்களான ஜி.ரஞ்சித், பிரசாத், டிமுத் ரணசிங்க மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.