ஸ்கொட்லாந்து பிரஜையுடன் யோகா செய்து அசத்திய இலங்கை தெரு நாய்!

Report Print Ramya in சமூகம்
324Shares

ஸ்கொட்லாந்து டண்டீ, பகுதியில் உள்ள யோகா பயிற்றுவிப்பாளர் ஒருவர் விடுமுறைக்காக இலங்கை வந்த போது, தெரு நாயுடனான தன் உறவு தொடர்பிலான அற்புத கதை ஒன்றினை தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தை சேர்ந்த பின்லே வில்சன் என்ற நபரே கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

குறித்த நபர் இலங்கை வந்த போது யோகாவில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் ஒரு தெரு நாயுடன் யோகா பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

உள்ளூர் மக்கள் விலங்கை விலங்காகவே பார்வையிடுவர் ஆனால்,குறித்த நாயுடன் நெருக்கமான உறவை பேணி வந்த பின்லே அதற்கு Amaloh என்ற பெயர் வைத்துள்ளார்.

இலங்கையை விட்டு செல்லும் போது குறித்த Amaloh நாயை தத்தெடுக்கவே அவர் தீர்மானித்திருந்தார்.

பின்னர் குறித்த நாயுடனான யோகாப் பயிற்சிகளை பின்லேவும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவராலும் பயிற்றப்பட்டு வெளியிடப்பட்ட குறித்த காணொளியை 775,000 பேர் பார்வையிட்டுள்ளனர். என பின்லே கூறியுள்ளார்.

தற்போது அனைவரும் ஒரு நாயின் யோகா வீடியோக்களை அதிகம் நேசிக்கின்றனர்.

ஒன்பது மாதங்களாக இலங்கையிலிருந்த குறித்த தெரு நாய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பின்லே வில்சனுடன் ஸ்காட்லாந்து சென்றுள்ளது.

இலங்கை Amaloh நாய் பற்றி குறித்த நபர் தெரிவிக்கையில்,

நான் இலங்கைக்கு சுற்றுலா வந்தபோது குறித்த தெரு நாயை சந்தித்தேன். பின்னர் குறித்த நாயுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது.

அதனால் யோகா பயிற்சியின் போது குறித்த நாயையும் இணைத்துக் கொள்வேன்.

நான் காலையில் எழுந்திருக்கும் போது Amaloh என் அறைக்கு வெளியே அமர்ந்திருக்கும்.

எங்களது யோகப் பயிற்சிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வதன் மூலம், எங்கள் ஜோடிக்கு ஒரு ரசிகர் வட்டமே இருக்கின்றது. Amaloh உண்மையில் மிகவும் நல்லவன் என பின்லே வில்சன் கூறியுள்ளார்.

நான் என் முழங்கைகளை கீழே வைத்திருந்தால் அதுவும் அப்படி செய்யும் நான் தரையில் என் கைகளை வைத்தால் அதுவும் அவ்வாறே செய்யும் என பின்லே தெரிவித்துள்ளார்.

10 மாதங்களாக என்னுடன் யோகா படித்து தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் எங்களது யோகா காணொளி இருக்கின்றது என்பதில் நான் மிகவும் பெருமை அடைகின்றேன்..

"நான் முதலில் Amaloh ஐ சந்தித்த போது அது, ஊட்டச்சத்து குறைவாகவே இருந்தது.

Amaloh செப்டம்பர் இறுதியில் இங்கே வருகை தந்ததில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் நன்றாக மாறிவிட்டது. எனவும் தெரிவித்துள்ளார்.

Comments